Sunday, October 28, 2012

Jothi's Kavithai*50

பிரிவின் வலியை
உனக்கு மிகவும்
பிடித்தவரின்
பிரிவால்
மட்டுமே உணர்த்த
முடியம்...!!!

இது வரை 50 கவிதையை ஒளிபரப்பிய ஜோதி,இனியும் தொடர உங்கள் ஒத்துழைப்பு அவசியம்!!!!!!
Jothi will be back shortly..

Jothi's Kavithai*49

நானும் தாயாக
வேண்டும்
உன்
குழந்தைக்கு மட்டுமல்ல
உனக்கும் தான்......

Jothi's Kavithai*48

நாம் நினைக்கும்
ஒவ்வொரு எண்ணமும்,
நாம் செய்யும்
ஒவ்வொரு செயலும்...
குறிப்பிட்ட காலத்திற்குப்
பின்,
சூட்சுமமாக
நம்மிடமே திரும்புகின்றன.
..

Jothi's Kavithai*47

சிறிய
அன்பைக்காட்டி பெரிதாய்
ஏமாற்றிவிடுகிறான்
வலிகள் நிறைந்த
ஒரு பெண்ணின்
உள்ளத்தை.

Jothi's Kavithai*46

ஆற்றில்
அடித்து செல்லப்பட்ட
ஒருவர்
என்னை நோக்கி கையை அங்குமிங்கும்
அசைத்தார்.. நானும்
பதிலுக்கு டாட்டா காட்டி வைத்தேன்......

Jothi's Kavithai*45

கல்வி என்பது மூன்றெழுத்து.
அதனை புகட்ட பல
எழுத்து தேவை.

Jothi's Kavithai*44

தெய்வம் பேச ஆரம்பித்தால்
மனிதனாய் தெரிவான்
மனிதன் மெளனமாய்
இருந்தால்
தெய்வமாய் தெரிவான்.

Jothi's Kavithai*43

பத்து ரூபாய்
கொண்டு வந்தால்
பாங்கன்
என்று சேர்த்துக்கொள்வ
ார்,
பாசம் மட்டும்
கொண்டு வந்தால்
பரதேசி என்றே பேசிக்கொல்வார்!
கெட்ட குணம் கொண்ட
உலகில், உனக்கு மட்டும்
ஏன் என்னில் அக்கறை?
வெளிச்சத்தையும்
இருட்டாய்க் காட்டும்
முகமூடி மனிதர்களிடத்தில்
இருட்டிலும்
விழிப்பாயிரு

Jothi's Kavithai*42

உலகின் மிகச் சிறந்த
காதலர்கள்....
ஆணின் முட்டாள்தனத்தை
புரிந்து கொள்ளும்
பெண்ணும்
பெண்களின்
குழந்தைதனத்தை
ரசிக்கும் ஆணும் தான்

Jothi's Kavithai*41

உன்னை பிரம்மன்
தவறுதலாக
படைத்தானோ
இல்லை
எனக்கென ஓர் அதிசய
சிற்பமாக வடித்தானோ

Jothi's Kavithai*40

மழைக்கு குடை பிடிக்கலாம்,
ஆனால்
என்னைக்காவது குடைக்கு மழை பிடிக்குமான்னு யோசிச்சமா?

Jothi's Kavithai*39

நீங்கள் மற்றவரை விட,
பலசாலியாக இருக்கலாம்..
பணபலம் மிக்கவராக
இருக்கலாம்...
இவை யாவும்
நிரந்தரமற்றவை....
நீங்கள் நல்லொழுக்கம்
கொண்ட பண்பாளராக,
உண்மைக்காக போராடும்
வீரராக வாழுங்கள்..
இருந்தாலும், இறந்தாலும்
உங்கள் புகழ்
என்றுமே நிலைத்திருக்கும
்....

Jothi's Kavithai*38

சில நாட்கள் மட்டுமே
பேசியிருக்கிறோம்
இருவரும்...
ஒருவருக்கொருவர்
காதலை
வெளிபடுத்தவில்ல
ை இன்னமும்...
உன்னோடு பேச
முடியா பல
நாட்களில்,
முந்நாளில் நீ
பேசிய
வார்த்தைகளை எல்லாம்
அசைபோட்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறேன
்....
எங்கேனும் மறைமுகமாக
உன்
மனதை சொல்லியிருப்பாய

என்று....

Jothi's Kavithai*37

வாழ்க்கை பாடத்தில்
வாழாதா பக்கங்களின்
சுவாரசியம்
வாழ்ந்த பக்கங்களில்
இருப்பதில்லை

Jothi's Kavithai*36

மழையில் நனைகின்றாயே
உன் அழகில்தான் அந்த
மழையே
நனைகின்றது என்பதறியாமல்!

Jothi's Kavithai*35

இரவுக்கும் உன்
இதயத்திற்கும்
நிறம் ஒன்று என்பதை
நீ சொன்ன வார்த்தையில்
அறிந்து கொண்டேன்
என்ன
என்று கேட்கிறாயா?
அதுதான்
இதுவரை இருந்த நம்
காதலை
இன்றுடன்
மறந்து விடுவோம்....
இதை சொல்ல
உனக்கென்றால்
ஒரு நிமிடம்
தேவைப்பட்டிருக்கலாம்
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள
எனக்கு
ஓராயிரம் ஜென்மங்கள்
போதாது
என்பதை நீ அறிவாயா?

Jothi's Kavithai*34

சின்ன வயதிலிருந்தே
என்னை தொட்டுப்
பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட
போதுதான்
தெரிந்து கொண்டேன்…
நீ என்னைக் கட்டிக்
கொள்ள ஆசைப்படுவதை

Jothi's Kavithai*33

அன்பே! நம்மை கண்
இமைகளோடு ஒப்பிடாதே
கண்கள் இமைக்கும்
வரை பிரிந்திருக்க
நேரிடும்!!!

Jothi's Kavithai*32

நான் எதிர்பாராத
நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்

Jothi's Kavithai*31

என் அந்தாதி நீதான் -
இதில்
எங்கே தேடுகிறாய்
என்னுள்
உன்னை!!!!!!

Jothi's Kavithai*30

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
அம்மாவின் இதயம்..

Jothi's Kavithai*29

நீ வரும்போது....
வெட்கத்தை உடுத்திக்கொள்ளவா?
வெட்கம் வரும்போது...
உன்னை உடுத்திக்கொள்ளவா?

Jothi's Kavithai*28

சத்தம்
கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!

Jothi's Kavithai*27

நீ
என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும்
ஒரு கவிதை அன்பே.

Jothi's Kavithai*26

காதலுக்காக நீயும்
இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால்
பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

Jothi's Kavithai*25

உனக்காய் துடித்த ஓர்
இதயம்
உனக்காய்
மட்டுமே துடித்த ஓர்
இதயம்
ரத்தத்தை உணவாய்
மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய்
பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம்
கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம்
பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட
துடிக்கிறது முதியோர்
இல்லத்தில்!
என் மகன்
எப்படி இருக்கிறானோ என
நினைத்து?

Jothi's Kavithai*24

உன் வியர்வை நாற்றம்
கூட
எனக்கு சுகம்
தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!

Jothi's Kavithai*23

பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று
இறைவனிடம்
வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....

Jothi's Kavithai*22

இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ
மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல்
விளையாட்டு.

Jothi's Kavithai*21

எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத
புன்னகை
நெருங்க மறுக்கும்
தயக்கம்
அருகிலிருந்தும்
தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல்
வாரம்...

Jothi's Kavithai*20

காலையில் நீ
தொலை பேசியில் உன்
நண்பனுடன்
உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி,
தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன்,
அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க
வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக
வேண்டாம்
என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன்
முகத்திலோ சிரிப்பு..
உடனே
அடுத்த
கேள்வி கேட்டேன்,
அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம்
என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில்,
சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும்
அனுபவித்தேன்...

Jothi's Kavithai*19

வானளவு சிந்தித்து ஊமையாகி போன
உணர்வுகள்...
வேற்றினக் காரன்
என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த
என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர்
என்று அன்பாய்
அரவணைக்கும்
என்னை ஈன்றவள்
ஒருபுறம் என்று,
காரணங்காட்டி பிரிந்துபோன
என் காதலில்
"தியாகம்" என்ற
பெயருக்கு பின்னால்
ஒளிந்து கொள்கிறது என்
இயலாமை...

Jothi's Kavithai*18

அன்பே உறவுகள்
மாறி போகலாம்
உரிமைகள்
விட்டு பறிபோகலாம்
கவலைகள்
கூடி போகலாம்
உள்ளமும்
வாடி போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
சுழல்காற்றும்
திசைமாறி போகலாம்
அலைகடலும்
கறைமீறி போகலாம்
சந்திரனும்
சுடர்விட்டு எரியலாம்
சூரியனும்
சூடு தணிந்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
நறுமணமும்
நாறி போகலாம்
இணைந்த மணமும்
இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும்
உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும்
உதவாமல் போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
மாற்றமும்
மாறி போகலாம்
காதலும்
கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம்
தணிக்கலாம்
பகற்கனவும்
பலித்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
தருமமும்
தவறி போகலாம்
சத்தியமும்
சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர்
விடலாம்
கூறிய வாளும்
குத்தாமல் போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
என் உணர்வுகளும்
உறைந்து போகலாம்
உடலும்
மெலிந்து போகலாம்
நாடி நரம்பும்
தளர்ந்து போகலாம்
உயிரும்
உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே

Jothi's Kavithai*17

என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர
கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக
நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல்
உடைந்து போவானோ?

Wednesday, October 24, 2012

Jothi's kavithai*16

எனக்கு தெரியும் நீ
பொய்யாக கோபப்பட்டாய்
என்று
உனக்கு தெரியுமா அன்பே
நான் மெய்யாக
வருத்தப்பட்டது....

Jothi's kavithai*15

காதல் என்பது பெரிதும்
இல்லை
காதலிப்பது அது புதிதும்
இல்லை
காதலின் பிரிவின்
வலி அது சிறிதும்
இல்லை
கண்ணீர் தான் காதல்
தோல்வியின் முடிவும்
இல்லை

Jothi's kavithai*14

உதட்டில் இருந்து
பல வார்த்தைகள்
வருகின்றன ..
ஆனால்
என் இதயத்திலிருந்து
வரும் வார்த்தை
உன் பெயர் மட்டுமே ...

Jothi's kavithai*13

அவள் கன்னம்..
கலக்கிவைத்து
காத்துக்கிடக்கும்
தேன் கிண்ணம்..

Jothi's kavithai*12

எதையாவது ஒன்றை நாம்
தொலைத்து விட்டு
அதை நினைத்து,
நினைத்து வேதனை
அடைவதை விட,
அது நம்
கவன
குறைவுக்கு அல்லது அலட்சியத்திற்கு
கிடைத்த
தண்டனை என்று நினைத்துக்
கொண்டு
உறுதியோடும்,
நிதானமாகவும்
மேலும்
முன்னேறுவோம்....
நிச்சயம்
தொலைத்ததை விட,
பன்மடங்கு பலன்
கிடைக்கும்..
ஆனால்,
நிச்சயமாக
தொலைத்தது கிடைக்காது....

Jothi's kavithai*11

காதல் அழகானது தான்
நான் அழகன் அல்ல
நான் அழகாய் இருக்கலாம்
அது காதல் தந்தது...

Jothi's kavithai*10

ரோஜாவை போல் நான்
அழகும் இல்லை...
ஆனால்....
என்
மனசு ரோஜாவை போல்
அழகானது..!

Jothi's kavithai*9

உருவமற்ற அன்பிற்காக
இதயம் உள்ள பல
உயிர்கள் ஏங்கும் ஏக்கம்
தான் காதல்......

Jothi's kavithai*8

உடல் பொய்
உயிரும் பொய்
உறவும் பொய்
நட்பு நம்பகமான பொய்
காதல் காம பொய்
பிரிவும் பொய்
கல்யாணம் தவிர்க்க இயலாத
பொய்
பிள்ளைகளும் பொய்
படிப்பும் பொய்
பட்டமும் பொய்
வேலை பொய்
சக வேலைக்காரன் பொய்
மேலிடம் பொய்
கீழிடம் பொய்
கலை தேவையான பொய்
கதைகளும் பொய்
ஆளும் அரசு பெரிய
பொய்
அரசியல் மட்டமான பொய்
பத்திரிக்கை பொய்யின்
பொய்
கனவுகள்
நம்பிக்கை பொய்
கற்பனைகள் சந்தோசப்
பொய்
சேமிப்பு பெரும்பொய்
இழப்பு பொய்
இறப்பு பொய்
எழுதும் நான் பொய்
படிக்கும் நீனும் பொய்
படைத்தவன் பொய்
பிரபஞ்சம் பொய்
காலம் பொய் – இந்தக்
கவிதையும் பொய்

Jothi's kavithai*7

உன்
செல்ல சிணுங்களுக்கும்
வீம்பு கோபத்திற்கும்
தீர்வு
ஒரு முத்தமும் மழையும்!

Jothi's kavithai*6

நெஞ்சில் வலியெடுத்துத்
துடிக்கின்றேன்
காரணம்
உன்
அறியாமையை கண்டு...
என்னை அறியாமல்
என் மனதை வருடியது நீ
ஆனால் உன் சொல்
என்னும்
அம்புகளால்
என்னை கொல்கிறாய் ...
சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து விட்டு ....
வலிக்கிறதா என்று கேட்கின்றாய்
வேதனையாக
இருக்கிறது
ஏற்கனவே ரணமாகிப்போன
என் இதயமதில் உன் சொல்
அம்புதனை வீசி விட்டு
இரகசியமாக என்
வேதனையை ரசிக்கின்றாய் ....
இப்படி நீ
என்னை தண்டிப்பது நியாயமா ???
ஏன் புரிந்தும்
புரியாதவனாய் ... நீ ??

Saturday, October 20, 2012

Jothi's Kavithai*5

ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. நீ சிரிக்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத்தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை உன் கோபப்பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போது உன் மடி சாய ஆசை......

ஜோதி

Jothi's Kavithai*4

ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. நீ சிரிக்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத்தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை உன் கோபப்பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போது உன் மடி சாய ஆசை......

ஜோதி

Jothi's Kavithai*3

எவ்வளவோ பேசினோம் இரவு பகலென்று பாராமல் இருந்தும் மறக்க முடியவில்லை!! "ஐ லவ் யூ" என்று போனில் முத்தமிட்ட ஓசை இன்னும் என்னிடம் ஒலித்து கொண்டே உள்ளது! என் இதயத்துடிப்பை போல....

ஜோதி

Jothi's Kavithai*2

பெண் என்றால் அது அவள் தான்.. அழகு கண் என்றால் அது அவள் விழிகள் தான்.. கலர் என்றால் அது அவளின் கலையான கருப்பு நிறம் தான்.. காதலன் என்றால் அவளுக்கு நான் உயிர் தான்.. கல்லறை என்றால் அதில் நாங்கள் உரங்கும் இரு இதயங்கள் தான்..

ஜோதி