நெஞ்சில் வலியெடுத்துத்
துடிக்கின்றேன்
காரணம்
உன்
அறியாமையை கண்டு...
என்னை அறியாமல்
என் மனதை வருடியது நீ
ஆனால் உன் சொல்
என்னும்
அம்புகளால்
என்னை கொல்கிறாய் ...
சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து விட்டு ....
வலிக்கிறதா என்று கேட்கின்றாய்
வேதனையாக
இருக்கிறது
ஏற்கனவே ரணமாகிப்போன
என் இதயமதில் உன் சொல்
அம்புதனை வீசி விட்டு
இரகசியமாக என்
வேதனையை ரசிக்கின்றாய் ....
இப்படி நீ
என்னை தண்டிப்பது நியாயமா ???
ஏன் புரிந்தும்
புரியாதவனாய் ... நீ ??
No comments:
Post a Comment